Tuesday, 10 July 2018

குளிகை பார்த்தால் கோடிஸ்வரன் ஆகலாம்

குளிகை பார்த்தால் கோடிஸ்வரன் ஆகலாம் !

வணக்கம் நண்பர்களே! 🙏🙏🙏

  இந்த பதிவில் குளிகை நேரத்தை பற்றியும், குளிகை நேரத்தினை பார்ப்பதினால் கிடைக்கும் நன்மைகளையும், எப்படி எளிதாக குளிகை  நேரத்தினை மனதில் பதியவைப்பது என்பதையும் காண்போம்..

குளிகை (குளிகன்) 

குளிகை என்பது குளிகன் என்று பொருள். இந்த குளிகன் யார்? என்றால் சனீஸ்வரன் மற்றும் ஜேஷ்டாதேவி ஆகிய தம்பதிகளின் புதல்வன் ஆவார், குளியலுக்கு மாந்தி என்ற தங்கையும் உண்டு குளிகனின் தாயார் ஜேஷ்டா தேவி என்று தமிழ் பெயரால் அழைக்கப்படுகிறார் இப்படிப்பட்ட குளிகன் என்ற பெயர் பெற்ற இவருக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டுள்ளது

அந்த நேரத்தில் ஒரு நல்ல விஷயத்தை நாம் செய்யும் போது அந்த செயல்கள் திரும்பத் திரும்ப செய்வது போன்ற நிலை ஏற்படும் எனவே நமது முன்னோர்கள் இந்த குளிகை நேரத்தை நல்ல செயல்கள் செய்யவும் சுபகாரியங்கள் தொடங்கவும் கடனை திருப்பிக் கொடுக்கவும் ஆகிய நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர்

ஜோதிட சாஸ்திரத்தின் படி  இந்த நேரத்தில் செய்கின்ற செயலானது வளர்ந்து கொண்டே இருக்கும், அதனால் கடன் வாங்குவது, வீட்டை காலி செய்வது, இறந்தவர் உடலை கொண்டு செல்வது, ஆகிய அசுப நிகழ்வுகளை இந்த நேரத்தில் செய்யக்கூடாது,
இதை மனதில் வைத்து இந்த நேரத்தை நாம் பின்பற்றும் போது வாழ்வில் பல உன்னத நிலையை அடையலாம்.
இப்போது இந்த குளிகை நேரம் எப்படி நாள்தோறும் வருகிறது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் நீங்கள் காணலாம், 

மனதில் பதிய வைக்க எளிய வழி 

 இந்த அட்டவணையில் பார்த்தபடி குளிகை நேரத்தை மனதில் பதிய வைக்க ஒரு எளிய உத்தி உள்ளது, அதாவது நீங்கள் கவனித்தீர்கள் என்றால், ஒரு நாளுக்கு இந்த குளிகை நேரம் ஆனது ஒன்றரை மணி நேரம் ஆகும், இதில் காலை 6 மணியிலிருந்து  மாலை நாலரை மணி வரை வருகிறது.

 இதன்படி பார்த்தோமேயானால் சனிக்கிழமை இந்த நேரமானது ஆறிலிருந்து ஏழு மணி வரை இருக்கிறது வெள்ளிக்கிழமை ஏழரையில் இருந்து ஒன்பது வரை இருக்கிறது, ஆகவே சனிக்கிழமையில் இருந்து  வெள்ளிக்கிழமை, திரும்ப வியாழக்கிழமை என்று கீழ்நோக்கி எண்ணி வரவேண்டும், சனிக்கிழமை ஆறிலிருந்து ஏழு மணி வரை வைத்துக் கொண்ட மாதிரி அடுத்த ஒன்றரை மணி நேரம் ஒவ்வொரு நாளும் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் இப்படி ஞாயிற்றுக்கிழமை வரை பார்த்தோமானால் இந்த நேரம் மாலை 4.30 வரை வந்துவிடும், எளிதாக மனனம் செய்து கொள்ள இது ஒரு எளிய வழியாகும்,

கடினமாக தோன்றினால் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொண்டு,உள்ளபடி பின்பற்றினால் தங்களது வாழ்வும் கடவுள் அருளால், வசந்தம் வீசும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 

இது போன்ற பல ஜோதிடம் தொடர்பான தகவல்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தாங்களும் பயன்பெறுமாறு ,ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம் சார்பில் கேட்டு கொள்கிறோம்,நன்றி ...🙏🙏🙏🙏

இந்த பதிவை வீடியோ வடிவில் காண இந்த லிங்க்கை யை கிளிக் செய்யுங்கள்.

குளிகை நேரம் 
ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்



Saturday, 29 October 2016

பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்


பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்

 
இனி பன்னிரு லக்னங்கள் பற்றி சித்தர்கள் அருளிய சில விதிகளை ஒவ்வொரு லக்னமாக பார்ப்போம்.

மேக்ஷம்
          மேக்ஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிக்கிரகம் கொடிய  பலன்களை செய்பவராக இருந்தாலும் மேக்ஷ லக்னத்தில் சூரியன் அமர்ந்தும், சுக்கிரன், குரு  இருவரும் கூடி ரிக்ஷபத்தில் அமர்ந்து சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்றும் இருந்தால் பாக்கிய யோகங்கள் ஒரளவு கிட்டும்.
       மேக்ஷ லக்னத்திலோ மகரத்திலோ செவ்வாய் முறையே ஆட்சி அல்லது உச்சமாக அமைந்தால் மிகச் சிறப்பான யோகத்தினை ஏற்படுத்தும், லக்னத்தில் சந்திரன் அமர்ந்து அவரைச் செவ்வாய் பார்த்தால் அரசாங்க பதவி கிட்டும், லக்னத்தில் அமர்ந்த சந்திரனை குரு தனுசில் அமர்ந்து பார்த்தால் மிகச் சிறப்பான பலன் களை தருவார்
      மேக்ஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ஜனன ஜாதகத்தில் செவ்வாய், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் அமைந்தால் துன்பத்தை தரும் பலன் களை தருவார், மேலும் விகார உணர்ச்சிகளை அதிகமாக்கித் தவறான நடத்தையை உண்டு பண்ணுவார்.
மேக்ஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதி ஆனாலும் அக்ஷ்டமாதி எனும் வலிமை பெருவதால் எந்த வீட்டிலும் தனிமையாக இருந்தால் நற்பலன் களை செய்ய முடியாது,
செவ்வாய் சுக்ரனுடன் இணைந்து தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்தால் தன யோகத்தை தருவதுண்டு.இதை போல் குருவுடன் செவ்வாய் சேர்ந்து இரண்டாம் வீட்டில் அமர்ந்தாலும் தன யோகம் உண்டு,செவ்வாய் புதனுடன் சேர்ந்து எந்த வீட்டில் நின்றாலும் நன்மை கிடைக்காது, செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து அமைந்தால் நன்மைகள் ஏற்பட கூடும்.

அடுத்த பதிவில் ரிக்ஷப லக்னத்தின் சூட்சுமங்களை பார்ப்போம்,
"அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்"
சித்தர்கள் ஆசியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்,

ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்

நன்றி
என்றும் அன்புடன்,
      ஆனந்த் ஈஸ்வர்.

Friday, 28 October 2016

Sunday, 23 October 2016

பாரசார முனிவரின் பன்னிரு லக்கினங்கள்


பாரசார முனிவரின் பன்னிரு லக்கினங்கள்

லக்னமே ஒரு மனிதனின் எண்ணங்களை பிரதிபலிக்கும் காரணியாகும். ஏனென்றால் ஒரு உயிர் பூமியில் ஜெனிக்கும் போது இருந்த சூரிய பகவானின் நிலையை வைத்து லக்னம் கணக்கிட படுகிறது.

எனவே "எண் சாண் உடம்புக்கு சிரசே பிராதானம்" என்ற வகையில் ஜோதிடத்தின் சிரசான(தலை) லக்னத்தை கொண்டே மனிதனின் உருவம், அழகு, எண்ண ஒட்டம், நிலைப்பாடு, கொள்கை, ஆகியவைகள் அறியபடுகிறது.
மேலும் நமது சித்தர்கள் லக்னத்தைப் பற்றி கூறியுள்ள ஜோதிட ரகசியங்களை வரும் பதிவுகளில் ஒவ்வொரு லக்னமாக பார்ப்போம்.

இன்று ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை செய்யும் கிரகம் எது, தீமை செய்யும் கிரகம் எது, என்பதை சுருக்கமாக காண்போம்.

லக்னம்
அதிபதி
நன்மை செய்யும்
கிரகங்கள்
தீமை செய்யும்
கிரகங்கள்
மேக்ஷம்
செவ்வாய்
குரு, சூரியன், சந்திரன்
சனி, புதன், சுக்கிரன்
ரிக்ஷபம்
சுக்கிரன்
புதன், சனி, சூரியன்
செவ்வாய், குரு
மிதுனம்
புதன்
சுக்கிரன், சந்திரன், சனி
சூரியன், குரு, செவ்வாய்
கடகம்
சந்திரன்
குரு, செவ்வாய், சூரியன்
புதன், சுக்கிரன்
சிம்மம்
சூரியன்
குரு, செவ்வாய், புதன்
சனி, சுக்கிரன், சந்திரன்
கன்னி
புதன்
சுக்கிரன், சனி, சந்திரன்
சூரியன், செவ்வாய், குரு
துலாம்
சுக்கிரன்
புதன், சனி, சந்திரன்
சூரியன், செவ்வாய், குரு
விருச்சிகம்
செவ்வாய்
குரு, சூரியன்
புதன், சுக்கிரன், சந்திரன்
தனுசு
குரு
செவ்வாய், சூரியன்
புதன், சுக்கிரன், சந்திரன்
மகரம்
சனி
புதன், சுக்கிரன்
சூரியன், செவ்வாய், குரு
கும்பம்
சனி
குரு, புதன், சுக்கிரன்
சந்திரன், செவ்வாய்
மீனம்
குரு
செவ்வாய், சந்திரன்
புதன், சுக்கிரன், சூரியன்


இந்த அட்டவணையில் ஒரு விசயம் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் அறிய முடியும்,

அதாவது இங்கே கிரகங்கள் இரண்டு அணிகளாக உள்ளதை காணுங்கள்

அதை நாம் "அருள் அணி, பொருள் அணி " என வைத்து கொள்வோம்,அதை காணலாம்,

அருள் அணி
பொருள் அணி
குரு
சுக்கிரன்
சூரியன்
புதன்
செவ்வாய்
சனி

இதில் சந்திரன் மட்டும் இரு அணிகளிலும் சேர்ந்து நடு நிலை கிரகமாகிறார்.

செம்பாம்பாகிய ராகு பொருள் அணியிலும், கரும்பாம்பாகிய கேது அருள் அணியிலும் சேர்ந்து கொள்கிறார்கள்.


நாளை முதல் லக்னங்களை பற்றி நமது சித்தர்களின் கூற்றுகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

சித்தர்களின் ஆசியுடன் நாளை சந்திப்போம்,

ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்

என்றும் அன்புடன்,

ஆனந்த் ஈஸ்வர்.

Saturday, 22 October 2016

உலக ஜோதிடர்களுக்கு வணக்கம், ஓரு இளம் ஜோதிடனின் கன்னி பதிவு......


நமது பாரத நாட்டில் பல முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் தோன்றினார்கள். இவர்கள் பற்பல அரிய ஜோதிட கருத்துகளைச் சொல்லிச் சென்றார்கள். இன்றைக்கு பல ஜோதிட கருத்துக்கள் வந்துவிட்ட போதும், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் சில மர்மங்களைப் போல சில ஜோதிட ரகசியங்களும் மறைந்து கிடக்கின்றன. அகஸ்தியர், ஜெயமுனி, கொங்கணர், வசிக்ஷ்டர், விசுவாமித்திரர் போன்ற பல முனிவர்கள் ஜோதிடத்தின் ரகசியங்களை மறைமுகச் சொற்களில் வைத்துவிட்டு சென்று இருக்கிறார்கள், புலிப்பாணி சித்தர் சொன்ன எளிய தமிழ் பாடல்களும் இன்று தமிழ் நாட்டில் வாய் வழியாக பாடி ஜோதிடம் சொல்லும் முறையும் இருக்கிறது. இவற்றையெல்லாம் திரட்டி ஒரு தொடரை பதிய வேண்டும் என விரும்பினேன். மிகமிக முக்கியமான சில ஜோதிட ரகசியங்கள், இங்கே வரும் பதிவுகளில் பதியபடும். தொடர்ந்து பதிவுகளை படியுங்கள், நன்றி!!!!!!!!
ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்
 வாழ்க வளமுடன்!!!!!!!! அன்புடன், ஆனந்த் ஈஸ்வர்....

பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்

பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்   இனி பன்னிரு லக்னங்கள் பற்றி சித்தர்கள் அருளிய சில விதிகளை ஒவ்வொரு லக்னமாக பார்ப்போம்....